எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

புதன், 3 ஜூலை, 2013

விண்டோஸ் 8: ரெப்ரெஷ் ஆண்ட் ரீசெட்

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பிரச்னைகளைச் சந்திக்கும்போது, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட எண்ணுகையில், இருவகையான ஆப்ஷன்களை நாம் சந்திப்போம். அவை ரெப்ரெஷ் மற்றும் ரீசெட் (“Refresh” and “Reset”). இவை இரண்டும் கம்ப்யூட்டரை, அதன் பேக்டரி செட்டிங்ஸ் அமைப்புக்குக் கொண்டு செல்லும். மொபைல் போன்களில் நாம், “reset to factory defaults” என ஒன்றை பார்க்கலாம். அதே போல் தான், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இவை செயல்படுகின்றன. அப்படியானால், இரண்டிற்குமான செயல்பாடு ஒன்றுதானா? அல்லது வேறு வேறா? இரண்டிற்கும் உள்ள செயல் வேறுபாடு என்ன?
ரெப்ரெஷ் செய்தால், கம்ப்யூட்டரில் நாம் வைத்திருக்கும் பைல்கள் அப்படியே இருக்கும். நாம் இன்ஸ்டால் செய்து வைத்த புரோகிராம்களும், எந்தவித இடர்ப்பாடும் இன்றி செயல்படத் தயாராய்த் திரும்பக் கிடைக்கும். நம் கம்ப்யூட்டரை ரெப்ரெஷ் செய்கையில்:
1.விண்டோஸ் நம் பெர்சனல் பைல்களை சேவ் செய்திடும். நாம் உருவாக்கி வைத்த பெர்சனல் செட்டிங்ஸ் விஷயங்களையும் அப்படியே காத்து சேவ் செய்து வைத்திடும்.
2. கம்ப்யூட்டரின் செட்டிங்ஸ் அமைப்புகளை மீண்டும் அமைத்திடும்.
3. அனைத்து டெஸ்க்டாப் புரோகிராம்களும் நீக்கப்படும். நீக்கப்பட்ட புரோகிராம் அனைத்தும் டெஸ்க்டாப்பில் சேவ் செய்யப்படும்.
எனவே, உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டர், அதனை விண்டோஸ் 8 சிஸ்டம் ரெப்ரெஷ் செய்த பிறகு, புதியதாக இன்ஸ்டால் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் போல இருக்கும். உங்களுடைய பெர்சனல் பைல்கள் எவையும் அழிக்கப்பட மாட்டாது.
விண்டோஸ் 8 மூலம் நாம், கம்ப்யூட்டரை ரீசெட் செய்கையில், விண்டோஸ் அனைத்தையும் நீக்கிவிடும். ஹார்ட் ட்ரைவினை மீண்டும் பார்மட் செய்தால், என்ன நடக்குமோ, அது நடந்தேறும்.
1. நம்முடைய பெர்சனல் பைல்கள் அனைத்தும் நீக்கப்படும்.
2. நாம் அமைத்து வைத்த கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் அனைத்தும் நீக்கப்பட்டு, கம்ப்யூட்டர் புதியதாக, அதன் பேக்டரி நிலைக்குத் தள்ளப்படும் .
அப்படியானால், நாம் கம்ப்யூட்டரை ரெப்ரெஷ் செய்திட வேண்டுமா? அல்லது ரீசெட் செய்திட வேண்டுமா? நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரின் இயக்கத்தில் பல பிரச்னைகளை எதிர்கொண்டு, அவற்றைச் சரி செய்திட வேண்டும் என எண்ணினால், அதனை முதலில் ரெப்ரெஷ் செய்திடுங்கள். விண்டோஸ் உங்கள் சிஸ்டம் பைல்களை ரெஸ்டோர் செய்து, டெஸ்க்டாப் புரோகிராம்கள் அனைத்தையும் அதன் மாறா நிலைக்குக் கொண்டு வரும். உங்களுடைய முக்கியமான பெர்சனல் பைல்கள் அனைத்தும் சேவ் செய்யப்பட்டு மீண்டும் கிடைக்கும்.
உங்களுடைய பெர்சனல் டேட்டா மற்றும் பைல்கள் எதுவும் கம்ப்யூட்டரில் இருக்கக் கூடாது என எண்ணினால், கம்ப்யூட்டரை ரீசெட் செய்திடவும். பேக்டரியிலிருந்து பெற்ற நிலைக்கு, முற்றிலும் புதிய சிஸ்டமாக, கம்ப்யூட்டர் தொடக்க நிலைக்குச் செல்லும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக