எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

சனி, 27 ஜூலை, 2013

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

இந்திய தலைநகரமான புது தில்லியில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 மொபைல் மற்றும் அதன் விலை வெளியிடப்பட்டுள்ளது. மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 மொபைல் இளைய தலைமுறையினுருக்காக உருவாக்கப்பட்டது என்று அந்த நிறுவனத்தார் கூறுகின்றனர். இந்தியாவில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4ன் விலை RS.17,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 பற்றி பல வதந்திகள் பரவின. இன்று அந்த வதந்திகளுக்கு கேன்வாஸ் 4 வெளியீடு முற்று புள்ளி வைத்துள்ளது. மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 மொபைலில் பல புதுமையான சிறப்பம்சங்கள் உள்ளது அது என்னவென்று பார்ப்போம். 5இன்ஞ் ஹச்டி கெப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீன் 920*1080 16M கலர்ஸ் 158 கிராம் 144.5*73*8.9mm டைமென்சன்ஸ் ஆன்டிராய்ட் 4.2.1 ஜெல்லி பீன் ஓஎஸ் 1.2 GHz கூவாட் கோர் மீடியாடெக் MT6589 ARM கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர் 13 மெகாபிக்சல் கேமரா 5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 1ஜிபி ராம்(RAM) 16ஜிபி மெமரி 32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி 3ஜி,2ஜி GPS, GPRS, EDGE, HSPA Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி 3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்4.0 2000 mAh 

பேட்டரி  மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4ன் புதுமைகளை பாருங்கள்.

நீங்கள் ஊதினால் மொபைல் அன்லாக் ஆகும்.

நீங்கள் ஸ்கிரீனில் ஒரே நேரத்தில் இரண்டு வீடியோக்களை பார்க்கலாம்.

வீடியோ பார்க்கும் பொழுது உங்களுக்கு மெசேஜ் வந்தால் நீங்கள் வீடியோ பின்னிங் செய்யலாம். அதாவது, வீடியோவை ஸ்கிரீனின் மேல் பகுதியில் பார்த்துக்கொண்டே மெசேஜ் அனுப்பலாம்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4ல் பனோரமிக் இமேஜ் எடுக்கலாம்

வீடியோ பார்க்கும் பொழுது நீங்கள் ஸ்கிரீனை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பினால் வீடியோ அதுவாக நின்றுவிடும்.

M! Security, Hike , Spuul, Game hub, M! Live போன்ற அப்ளிகேசனுடன் கேன்வாஸ் 4 வருகிறது.

15 நொடிகளில் இதில் 99 படங்களை எடுக்கலாம். அதில் எது நன்றாக உள்ளதோ அதை தேர்வு செய்துகொள்ளலாம்.

நீங்கள் கையில் உரை அணிந்துகொண்டு ஸ்கிரீனை டச் செய்தாலும் கேன்வாஸ் 4 இயங்கும்.

உங்களுக்கு கால் வரும் பொழுது நீங்கள் மொபைலை காதின் அருகில் கொண்டு சென்றால் அது தானாக அட்டென்ட் ஆகும். நீங்கள் போன் கான்டெக்டுக்கு சென்று மொபைலை காதின் அருகில் கொண்டு சென்றால் கால் தானாக டயல் ஆகும்.

கேமராவில் ஒரு படத்தை பிடித்து அதில் மல்டிபிள் எபக்கட்களை புகுத்தலாம். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக