விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. வாங்கிப் பயன்படுத்துவோருக்கு, வர இருக்கும் விண்டோஸ் புளு என அழைக்கப்பட்ட விண்டோஸ் 8.1 என்னும் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் இலவசமாகவே கிடைக்கும் என, மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ரெல்லர் தெரிவித்துள்ளார். விண்டோஸ் 8.1 பல அப்டேட் புரோகிராம்கள் அடங்கிய தொகுப்பாக இருக்கும் எனவும். விண்டோஸ் 8 பயன்படுத்தியவர்கள், இதற்கு மாறிக் கொள்ளத் தயாராக இருக்கும்போது உடனே வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். புதிய சிஸ்டத்தில், விருப்பப்பட்டால் பயன்படுத்தும் வகையில் ஸ்டார்ட் பட்டன் வழங்கப்படும். மற்றும் முன்பு இருந்தது போல, டெஸ்க்டாப் வகையில் சிஸ்டத்தின் இயக்கத் தொடக்கம் இருக்கும் என்றும் தெரிகிறது. வரும் ஜூன் மாத இறுதியில், விண்டோஸ் 8.1. சிஸ்டத்தின் வெளியீட்டுக்கு முந்தைய பதிப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. அந்த தொகுப்பு குறித்த மக்களின் பின்னூட்டங்களைப் பெற்ற பின், இறுதி வடிவம் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக