எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

வெள்ளி, 26 ஜூலை, 2013

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை

நட்புவளையம் - முதல் தமிழ் சமூக வலைத்தளம்:

இன்றய காலகட்டத்தில் நமது எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூகம் வலைத்தளங்களின் பங்கு அளவிட முடியாதது. நம் தளத்தில் உறுப்பினர்கள் பதிவிட்ட பதிவுகள் முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வழியே பல ஆயிரம் வாசகர்களை சென்றடைகிறது என்பது மறுக்க முடியாத விஷயம். தினம்தோறும் பல சமூக வலைதளங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் அனைத்து வலைதளங்களும் வெற்றி அடைவைதில்லை. இதுவரை பல நூற்று கணக்கில் சமூக வலைதளங்கள் ஆங்கில தலைப்பை கொண்டுதான் வந்துள்ளது. முதல் முறையாக தமிழில் "நட்புவளையம்" என்ற தலைப்புடன் சமீபத்தில் அறிமுகம் ஆகியது.


இந்த சமூக வலைத்தளம் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணால் முகநூலுக்கு (Facebook) இணையாக www.natpuvalayam.com என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துலக வாழ் தமிழ் உறவுகளும் இந்த நட்புவளையத்த்தில் இணைந்து தமிழர்களுக்கான சமூகவலைப் பின்னலை ஏற்படுத்துவோம் வாருங்கள்.

இதன் முகப்பு பக்கம் ஏறக்குறைய முகநூல் போலவே காட்சி அளிக்கிறது. மேல் பக்கம் அதே நீல கலர் சற்றே மாறுபட்டு பட்டி உள்ளது. உள்நுழை விவரங்கள் மற்றும் புதிய கணக்கை உருவாக்கும் பகுதியும் முகநூல் படிதான் உள்ளது. நடுவில் உலக வரைபடம் நட்பு வளையத்தை இணைக்கும் விதமாக அமைந்து உள்ளது. கீழ் பக்கம் ஏற்கனவே நட்பு வளையத்தில் இணைந்தவர்களின் புகைபடத்தோடு அவர்களின் சுயவிவர சுட்டியை தாங்கி உள்ளது. அதற்கும் கீழே இரண்டு விளம்பரங்கள் மற்றும் இத்தளத்தின் விவரங்கள் ஃபுட்டர் பகுதில் இடம் பெறுகிறது (படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்)


மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் கொடுத்து லாகின் செய்தால் வருகிற முகப்பு பக்கமும் பெரும்பாலும் முகநூல் போன்றுதான் காணப்படுகிறது. மேலே நட்பு வளையம் பேனர் அதன் வலது பக்கம் சுயவிவரம் மற்றும் கணக்கு விவரங்கள். கீழே ஒரு நீண்ட மெனு பார் அதில் நண்பர்கள் விவரம், உறுப்பினர்கள் விவரம், முகநூல் பக்கம் போலவே நட்புவலையத்துக்கும் பக்கம் உருவாக்கி கொள்ளலாம், வலைப்பூ, புகைபடங்கள், கருத்துக்களங்கள், கருத்து கணிப்புக்கள், காணொளி, வினா விடை, நிகழ்வுகள், இசை, சந்தையியல் மற்றும் ஆப்ஸ் விவரங்கள் இந்த மெனுவில் உள்ளது.

சில மணி நேரம் நட்புவளையத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை ஆராய்ந்ததில் முகநூல் போலவே தோன்றினாலும் முகநூலை காட்டிலும் சில சிறப்பியல்புகள் இருக்கவே செய்கின்றன. இதில் அனைத்து வகையான வேலைகளையும் மிக எளிதாக செய்யும் படி மெனு பார் அமைந்ததில் மேலும் சிறப்பு
.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக