எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

செவ்வாய், 23 ஜூலை, 2013

பேஸ்புக்கில் நண்பனை நீக்கும் வழி

பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக, அஞ்சல் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். நாம் அவற்றைப் பார்த்து உறுதி செய்துவிட்டால், அவர்கள் பேஸ்புக்கில் இடும் அஞ்சல்கள் நமக்கு தொடர்ந்து வரும். இதில் என்ன பிரச்னை என்றால், நாம் அவர்களின் அழைப்பினை ஏற்ற பின்னரே, அவர் இடும் தகவல்கள் நமக்கு ஒப்பானவை அல்ல என்று தெரியவரும். சிலர் தேவையற்ற வகையில் அரசியல் தகவல்களையும், பெண்களின் படங்களையும் இடுவார்கள். இவர் களை உடனே நம் நண்பன் என்ற நிலையிலிருந்து நீக்கவே விரும்புவோம். இதற்கு என்ன செய்யலாம்?
பேஸ்புக் சென்று, குறிப்பிட்ட அந்த நபரின் டைம்லைன் செல்லுங்கள். அந்த நபருக்கான லிங்க்கில் கிளிக் செய்தால் போதும். உங்களுக்கு அவர் குறித்த தளம் கிடைக்கும். இந்த டைம் லைன் பாக்ஸின் மேலாக Friends என ஒரு லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால் கிடைக்கு மெனுவில், Unfriend என்பதில் கிளிக் செய்திடவும். இதனைச் செய்தால், அவரின் நண்பர்கள் பட்டியலிலிருந்து உங்கள் பெயர் நீக்கப்படும். மீண்டும் அவருக்கு நண்பன் ஆக விரும்பினால், மீண்டும் ஒரு new friend request கொடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக