ப்ரீபெய்டு செல்போன் சேவையை போன்று ப்ரீபெய்டு இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சேவையை பெற பொருத்துதல் கட்டணம் ரூ.250 எனவும், மோடத்திற்கான விலை ரூ.1000 அல்லது ரூ.1600 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவில்லா தகவல் டவுன்லோடு செய்ய ரூ.300, ரூ.550, ரூ.1200 என 3 மதிப்புகளில் ரீசார்ஜ் செய்யலாம். ரூ.300க்கு ரீசார்ஜ் செய்தால் 7 வாரங்களுக்கு அளவில்லாமல் பயன்படுத்தலாம். டவுன்லோடின் வேகம் 256 கேபி. ரூ.550க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு 256 கேபியும், 15 நாள் என்றால் 512 கேபி, 7 நாள் என்றால் ஒரு எம்பி வேகம் இருக்கும். ரூ.1200 என்றால் 30 நாளுக்கு 512 கேபி, 15 நாளுக்கு ஒரு எம்பி, 7 நாளுக்கு 2எம்பி வேகம் இருக்கும். இவை தவிர குறிப்பிட்ட அளவில் இன்டெர்நெட் பயன்படுத்த டவுன்லோடு கூப்பன்களுமம்விற்பனை செய்யப்பட உள்ளன. இவை ரூ.50 முதல் ரூ.5000 வரை பல மதிப்புகளில் கிடைக்கும். பயன்பாட்டு காலம் 7 நாள் முதல் 210 நாள் வரை. குறிப்பிட்ட காலத்துக்குள் தொகை தீர்ந்து விட்டால் ரூ.100, 200, 500க்கு டாப்அப் செய்து கொள்ளலாம். இந்த சேவையை பெற பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Source & Thanks : dinamalar
0 கருத்துகள்:
கருத்துரையிடுக