விண்டோஸ் கணினியின் performanceஐ அளவிட Windows Experience Index (Windows Rating) என்கிறார்கள். இந்த Rating வன்பொருள்,மென்பொருள் வேலை செய்யும் திறனை CPU, RAM, GPU, Hard Disk உடன் சேர்த்து கணக்கிட்டு தரப்படுகிறது. இது ஒரு கணினியின் செயல்பாட்டை பொறுத்து மதிப்பிடப்படுகிறது. இது பற்றிய விவரங்களை இந்த பதிவில் காண்போம்.
இதை நீங்கள் கணினியில் Start -> Control Panel –> Performance Information and Tools அல்லது system -> Windows Experience Index இங்கே சென்று பார்க்க முடியும்.
புதிய மென்பொருள்/வன்பொருள் கணினியில் இணைக்கும் போது புதிதாக reset செய்தால், rating சரி செய்யப்பட்டு புதிய அளவு காட்டப்படும். அங்கே basicScore, subscore என இரண்டு அளவுகள் காட்டப்படும். subscore இன் குறைந்த அளவு basicScore இல் காட்டப்படும். கணினி வாங்கும்போது முக்கியமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கணினிகளை வாங்கும் போது இந்த rating ஐக் கவனித்து வாங்கலாம். ஆனாலும் அவை நிச்சயம் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம் படத்தைப் பாருங்கள். சாதாரண பழைய கணினியில் 1.0 என்ற basicScore ஐ 7.9 ஆக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
நமது அரசின் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் நிதி நிலை, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என பல நல்ல தகவல்களை புள்ளி விபரங்களுடன் தெரிவிப்பார். சில தினங்களின் பின்னர் அதிகாரிகளும் பொருளாதார நிபுணர்களும், நாம் தலையில் கையை வைக்கும் அளவு மோசமான தகவல்களைத் தருவார்கள்.அது போல் நாம் எதையும் எப்படியும் மாற்றி அமைக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாம் Man Made. God Made அல்ல.
இந்த Rating முறை 1 இல் இருந்து 7.9 வரை உள்ளது. 64 பிட் இல் 4 GB Ram ற்கு கீழிருந்தால், Basicscore 5.9 ஆக அதி கூடிய அளவாகக் காட்டப்படும். ஓரளவு பயன்படுத்தப்பட்ட சாதாரண கணினியில் 2.0 – ஆக இருந்தால் பொதுவான அனைத்து வேலைகளுக்கும் ஏற்றதாக இருக்கும். 3.0 என்பது Windows 7 இல் Nero வுடன் சாதாரண வேலைகளுக்கு ஏற்றதாக இருக்கும். 5.0 என்பது Windows 7 புதிய முறைகளைப் பயன்படுத்தவும், multi-taskingக்கு ஏற்றதாகவும், 7.0 என்பது கிராபிக், விளையாட்டு போன்ற உயர்ந்த வேலைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும். இதற்குப் பொருள், பிரச்சனைகள் இன்றி நன்றாக வேலை செய்யும் என்பதே தவிர, அவற்றிற்கு குறைந்த அளவு Rating உள்ளவை வேலை செய்யாது என்பது பொருள் அல்ல. subscore களின் அளவைப் பார்த்து, குறைவாக உள்ளவற்றை upgrade செய்வதன் மூலம் basicScore இன் அளவை உயர்த்தலாம்.
இந்தப் படத்தில் Processor 5.3 எனக் காட்டப்படுவதால், Basicscore 5.3 ஆக இருக்கிறது. CPU Driverஐ update செய்யலாம் அல்லது முடிந்தால் upgrade செய்யலாம். அப்படி செய்வதால் வேகம், performance ஐ அதிகரிக்கலாம். அது போல் RAM upgrade செய்யலாம் அல்லது RAM ஐக் கழற்றி தொடர்புகளை சுத்தம் செய்து மீண்டும் இணைத்துக் கொள்ளலாம். அது போல் கிராபிக் கார்டையும் upgrade அல்லது driver update செய்து கொள்ளலாம்.
மேலே உள்ள படத்தில் HardDisk என்ற வன்தட்டு 5.9 என குறைந்த அளவில் காட்டப்பட்டு, subscore உம் அதே குறைந்த அளவைக் காட்டுகிறது. மற்றவை நன்றாக இருக்கிறது. விரும்பினால் புதிய வன்தட்டு ஒன்றை மாற்றலாம். அப்படி மாற்றும்படி சொல்வதைவிட ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது சிறந்ததாகும்..
வன்தட்டு என்பது case, drive motor, platters, drive heads, logic board இவற்றால் ஆனது. அடிக்கடி format செய்வது, அடிக்கடி OS களை மாற்றுவது, இவற்றால் Track, Sector track, Sector, Cluster களில் ஏற்படும் பிழைகள், defragmentation செய்யாமல் விடுவது, chkdsk செய்யாது விடுவது போன்றவற்றாலும், கணினி, மடிக்கணினி உள்ளே தூசிகள் தங்கி விடுவதாலும் இந்தப் பிழைகள் ஏற்படுகிறது. அதிக தூசிகள் கணினிக்குள் தங்கி விடுவதால், அதிக வெப்பம் ஏற்படுவதும், தூசி அடைத்துக் கொள்வதால் cooling fan,CPU-Heatsink, GPU fan, Hard Disk, CD/DVD Drive வேலை செய்யாமல் விடவோ அல்லது வேலை செய்யும் தரத்தைக் குறைக்கவோ செய்யும். அத்துடன் உள்ளே வெப்பம் அதிகரித்து மிக குறைந்த மின்சாரத்தில் இயங்கும் பகுதிகள் பழுதடைகின்றன.
இதைவிட வன்தட்டு, CD/DVD/USB/SD Card இவை ஒவ்வொன்றும் வேவ்வேறான முறையில் read and write செய்யப்படுவதுடன் வேகமும் வேறுபடுகிறது. உதாரணமாக IDE,SATA வை விட SSD hard drive முற்றிலும் வேறுபட்ட முறையில் இயங்குகிறது. Rating இல் subscore வன்தட்டின் வேகத்தையும் megabytes per second கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இவை எல்லாம் தான் குறைந்த rating ற்கு காரணம். அதனால் வன்தட்டை மாற்றுவதை விட மேலே சொன்னவற்றை கவனிப்பதாலும் சரி செய்யலாம்.
வன்தட்டின் வெப்பம் 25 – 50 டிகிரி செல்சியுஸ்ற்குள் இருக்க வேண்டும். 50ற்கு மேலானால் உட்பகுதிகளை பழுதடையச் செய்யும். (CPU/GPU 40 -65 டிகிரி செல்சியுஸ் ற்குள் இருப்பது சிறந்தது.) அதிக வெப்பநிலை ஏற்படுமானால், மேலதிகமாக ஒரு cooling Fan ஐ இணைத்துக் கொள்ளலாம்.
இந்த Ratingஐ வைத்து ஒரு கணினியின் செயல்பாட்டை அறிந்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக