எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

பரவும் புது வைரஸ்! கொஞ்சம் உஷாருங்க...

பரவும் புது வைரஸ்! கொஞ்சம் உஷாருங்க இது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. கம்ப்யூட்டரில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் காப்பி செய்கிறது.

இன்று உலகின் எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் ஒரு எதிர் விஷயம் கண்டிப்பாக இருக்கும் அந்த நாம் எவ்வளவு முன்னேச்சரிக்கையாக கம்பியூட்டரில் ஆன்ட்டி வைரஸ் போட்டு வைத்தாலும் வைரஸ் வருவது என்பதை நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகும். வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த ‘Win32/Ramnit' என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வைரஸ் தான் நுழைந்த கம்ப்யூட்டர்களில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் கண்டறிந்து, அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது. பின்னர், இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது. இந்த வைரஸ் தன்னை, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக