சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்
பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில்
இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று சரிசெய்து
வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க
Samsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம்
Calculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள்
உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சில வகை மொபைல்கள் Unlock ஆகிவிட்டால் Unlock எடுப்பதற்கு
கண்டிப்பாக சர்வீஸ் சென்டர் போய் தான் ஆக வேண்டும் என்ற
கட்டாயம் இன்றும் இருக்கிறது எதற்காக என்றால் சாதாரன code
மட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எளிதாக Unlock செய்யலாம்
ஆனால் IMEI எண் கொடுக்க வேண்டும், சிலருக்கு IMEI எப்படி
நம் அலைபேசியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியாது,
இந்த IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து
விட முடியாது, Unlock செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு
மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : Download
இந்த இலவச மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில்
நிறுவிக்கொள்ளவும். அடுத்து இந்த மென்பொருளை இயக்கி
நமக்கு எந்த மொபைல் Unlcok செய்ய வேண்டுமோ அதன்
நிறுவனத்தையும் மாடல்-ஐயும் தேர்ந்தெடுக்கொள்ள வேண்டும்,
அடுத்து IMEI எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் என்று
நம் மொபைலில் *#06# என்று கொடுத்ததும் நம் IMEI
எண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI
என்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate
என்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை
Unlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும்
இதன்படி எளிதாக நம் மொபைலை Unlock செய்யலாம்.
மொபைல் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்துக்
கொள்ள வேண்டிய மென்பொருள். கண்டிப்பாக இந்தப்பதிவு
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது புதிதாக
வந்திருக்கும் மொபைல் போனுக்கான Unlock code இந்த
மென்பொருளில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்