எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

வியாழன், 12 செப்டம்பர், 2013

விரைவில் வருகிறது Android KitKat 4.4

உலகளவில் ஒட்டு மொத்த ஸ்மார்ட்போன்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களால் செயல்படுகிறது.
ஆன்ட்ராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு பல புதிய வெர்ஷன்களை வெளியிடுகிறது.
சமீபத்தில் தான் ஆன்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஆன்ட்ராய்ட் 4.4 கிட் காட் என்ற புதிய இயங்குதளத்தை வெளியிட உள்ளது.
நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்துடன் இணைந்து கூகுள் இந்த இயங்குதளத்தை வெளியிடுகிறது.
ஆன்ட்ராய்டின் அடுத்த ஓஎஸ்-க்கு இந்த பெயரை நெஸ்ட்ளே நிறவனத்துடன் இணைந்து வைத்திருப்பது சிறப்பாக உள்ளது, இதை விட ஒரு நல்ல பெயரை எங்களால் கற்பனை செய்ய முடியவில்லை என ஆன்டிராய்டின் மார்கெட்டிங் டைரெக்டர் மார்க் வால்னெர்பெர்க் தெரிவித்துள்ளார்.
நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்தின் மார்கெட்டிங் தலைமை அதிகரியான பாட்ரிஸ் புலா கூறுகையில், உலகத்தின் மிக பிரபலமான மொபைல் ஓஎஸ் உடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த பெயர் சூட்டப்பட்டது ஏன் என்ற விளக்கத்தையும் கூகுள் அளித்துள்ளது.
அதாவது, ஆன்டிராய்ட் ஓஎஸ் கொண்ட மொபைல்கள் அல்லது டேப்லெட்கள் போன்ற சாதனங்கள் நமது வாழ்க்கையை இனிப்பாக்குகின்றன. அதனால்தான் இதுவரை ஆன்டிராய்ட் ஓஎஸ்களுக்கு கப்கேக்(Cupcake), டூநட்(Donut), எக்லையர்(Eclair), ப்ரோயோ(Froyo), ஜிஞ்சர்பிரட்(Gingerbread), ஹனிகோம்ப்(Honeycomb), ஐஸ்கிரீம் சான்ட்விச்(Ice Cream Sandwich) மற்றும் ஜெல்லிபீன்(Jelly Bean) என பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் எல்லோருக்கும் பிடித்த சாக்லேட்டின் பெயர் மட்டும் இடம் பெறாமல் இருந்தது அதனால் தான் இப்பொழுது அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக