எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

75 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக....

ஒரு டாக்குமென்ட் கோப்பினை எடுத்துக் கொண்டால் அந்த கோப்பினை வெறும் படிக்க மட்டும்
அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும். அதே போல் தான் ஒரு வீடியோ கோப்போ அல்லது ஆடியோ
கோப்போ இருந்தாலும். தனித்தனி மென்பொருட்கள் நிறுவ வேண்டும். அப்படி ஒவ்வொரு மென்பொருள்
நிறுவும் பொழுது ஒவ்வொரு மென்பொருளும் தனித்தனியாக செயல்படும் பொழுது கண்ணினியின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இது மட்டுமல்லாமல் கணினியின் உள்ள வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இன்னும் அதிகமாக
கணினியின் வேகம் இன்னும் குறைகிறது. நாம் இது போல் இந்த கோப்புகளை எல்லாம் படிக்க மட்டும் என்றால்
அல்லது வியூ மட்டும் செய்வதாக இருந்தால் அதற்கு ஒரு மென்பொருள் உள்ளது இதன் பெயர் ப்ரீ ஒபனர் (
சோடா ஒபனர் போல!!) Free Opener.
ஆதரிக்கும் கோப்பின் வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இது மொத்தம் 75க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆதரிக்கிறது.

© சோர்ஸ் கோடுகள் -Code Files (.c, .cs, .java, .js, .php, .sql, .vb)
© வெப் பக்கங்கள் - Web Pages (.htm, .html)
© போட்டோஷாப் கோப்புகள் - Photoshop Documents (.psd)
© புகைப்படங்கள் - Images (.bmp, .gif, .jpg, .jpeg, .tiff)
© எக்ஸ்எம்எல் கோப்புகள் - XML Files (.resx, .xml)
© பவர் பாயிண்ட் கோப்புகள் - PowerPoint® Presentations (.ppt, .pptx)
© வீடியோ கோப்புகள் - Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv)
© மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பு கோப்புகள் - Microsoft® Word Documents (.doc, .docx)
© 7ஜிப் வகை - 7z Archives (.7z
© சப்டைட்டில் கோப்புகள் - SRT Subtitles (.srt)
© ரா இமேஜஸ் - RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
© ஐகான்கள் - Icons (.ico)
© எக்எஸ்எம்எல் பேப்பர் கோப்புகள் - Open XML Paper (.xps)
© டொரென்ட்கள் - Torrent (.torrent)
© ப்ளாஷ் கோப்புகள் - Flash Animation (.swf)
© ஜிப் வகைகள் - Archives (.jar, .zip)
© ரிச் டெக்ஸ்ட் கோப்புகள் - Rich Text Format (.rtf)
© டெக்ஸ்ட் கோப்புகள் - Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
© ஆப்பிள் பேஜஸ் - Apple Pages (.pages)
© எக்ஸல் கோப்புகள் - Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)
© சிஎஸ்வி கோப்புகள் - Comma-Delimited (.csv)
© அவுட்லுக் மெஸேஜ்கள் - Outlook Messages (.msg)
© பிடிஎப் கோப்புகள் - PDF Documents (.pdf)
© விகார்டு கோப்புகள் - vCard Files (.vcf)
இந்தமென்பொருளை தரவிறக்க சுட்டி 26 MB...
https://www.dropbox.com/s/0z188twc8m2w50d/set.txt?dl=0

செவ்வாய், 31 டிசம்பர், 2013

மைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் முற்றிலும் புதிய வழிமுறை ஒன்றை மைக்ரோசாப்ட் அண்மையில் அறிமுகப்படுத்தியது. சிலருக்கு வழக்கமான விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து வருவதற்குத் தயக்கம் இருந்தாலும், இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறைக்கு மாறி வருகின்றனர். என்னதான் மைக்ரோசாப்ட் மீது குற்றம் சாட்டினாலும், கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நம் வாழ்க்கை நடைமுறையின் ஏதாவது ஒரு விதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு சாப்ட்வேர், பயன்பாட்டினத் தந்து கொண்டு தான் இருக்கிறது. உலகளாவிய இந்த வளர்ச்சியும் பயன்பாடும், வேறு எந்த ஒரு நிறுவனமும் மக்களுக்கு தந்ததில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியினை இங்கு காணலாம். 1975 ஆம் ஆண்டில், பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ் தொடங்கினார். தொடங்கியது முதல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தினைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டு அசுர வளர்ச்சியினை மேற்கொண்டார்.
1974 – ஐ.பி.எம். நிறுவனம் எஸ்.க்யூ.எல். தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியது. டொனால்ட் சேம்பர்லின் மற்றும் ரேய்மண்ட் பாய்ஸ் இதனைக் கொண்டு வந்தனர்.
1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
1979 – வர்த்தக ரீதியாக, எஸ்.க்யூ.எல். ஆரக்கிள் பதிப்பு 2ல் தரப்பட்டது.
1984 – மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் 1 என்ற பெயரில், டாஸ் இயக்க பதிப்பு, வர்த்தக நடைமுறைக்கு அளிக்கப்பட்டது.
1985 – விண்டோஸ் 1.0. வெளியானது.
1986 – இளைய வயதில் உலக அளவில் கோடீஸ்வரராக பில் கேட்ஸ் தன் 31 ஆவது வயதில் இடம் பிடித்தார்.
1989 – மைக்ரோசாப்ட் எஸ்.க்யூ.எல் சர்வர் தயாரிப்பில் இணைந்து செயலாற்றியது.
1990 – NGWS (Next Gen Web Services) என்ற பெயரில் டாட் நெட் தொழில் நுட்பத்தினை மைக்ரோசாப்ட் உருவாக்கியது.
1992 – விண்டோஸ் 3.1 வெளியானது. விண்டோஸ் இயக்கத்தினை இரண்டரை கோடி பேர் பயன்படுத்தினர்.
1993 – மைக்ரோசாப்ட் தங்களுடைய சர்வர்களின் இயக்கத்தினை XENIX தொழில் நுட்பத்திலிருந்து Exchangeக்கு மாற்றியது. இதற்கு மைக்ரோசாப்ட் எடுத்துக் கொண்ட காலம் மூன்று ஆண்டுகள்.
1993 – விண்டோஸ் அட்வான்ஸ்டு சர்வர் மற்றும் விண்டோஸ் என்.டி. வெளியானது.
1993 – விண்டோஸ் என்.டி.யுடன் இணைந்து எஸ்.க்யூ.எல். மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது.
1995 – பெருத்த விளம்பரம் மற்றும் ஆரவாரத்துடன், மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. வெளியான நான்கு நாட்களிலேயே, பத்து லட்சம் விண்டோஸ் 95 இயக்க தொகுப்புகள் விற்பனையாயின.
1995 – மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மெயில், காலண்டர் மற்றும் இணைந்த சாப்ட்வேர் தொகுப்புகள் முதன் முதலாக விண்டோஸ் 95 தொகுப்புடன் இணைந்து வெளியானது.
1995 – விண்டோஸ் என்.டி. சர்வர் 3.5, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. முதன் முதலாக நவீன கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டது.
1997 – விண்டோஸ் என்.டி. சர்வர் பதிப்பு 4.0, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு மிக உதவியாக இருந்தது.
1998 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்னாளில் தந்த மைக்ரோசாப்ட் சிஸ்டம் சென்டர் இயக்கத்திற்கு முன்னோடியாக, சர்வர் குரூப் நிறுவனம், SeNTry என்னும் இயக்கத்தினைத் தந்தது.
1998 – ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் சொல்யூசன் என்ற பிரிவில் முதன் முதலாக, Microsoft Project Central உருவாகி வெளியானது.
2000 – மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டாட் நெட் (.NET) பிரேம் ஒர்க் தொகுப்பின் சோதனைப் பதிப்பு வெளியானது.
2000 – எக்சேஞ்ச் சர்வர் 2000 வெளியானது. இது முதலில் அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. ஆனால், முதன் முதலாக இன்ஸ்டண்ட் மெசேஜிங் என்ற தொழில் நுட்பத்தினைக் கொண்டிருந்தது.
2000 – நிறுவனங்களுக்கு பல தீர்வுகளைத் தந்த Biz Talk Server வெளியானது.
2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி, மிகக் குறுகிய காலத்தில் பல லட்சக்கணக்கான பயனாளர்களைப் பெற்றது. 40 கோடி பதிப்புகள் மிக எளிதாக விற்பனை செய்யப்பட்டன.
2002 – மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் என்ற மேனேஜ்மெண்ட் சாப்ட்வேர் வெளியிடப்பட்டது.
2002 – டாட் நெட் பதிப்பு 1.0 வெளியானது.இது அனைத்து விண்டோஸ் இயக்கங்களுடனும் இணைந்து செயல்பட்டது. புரோகிராம்கள் தயாரிப்பில் உதவிட விசுவல் ஸ்டுடியோ வெளியானது.
2002 – விசுவல் ஸ்டுடியோ மற்றும் டாட் நெட் இயக்கங்களுடன் செயலாற்றும் வகையில் Biz Talk Server 2000 வெளியானது.
2003 – டாட் நெட் இயக்கம் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு, விண்டோஸ் சர்வர் 2003 மற்றும் விசுவல் ஸ்டுடியோவுடன் வெளியிடப்பட்டது.
2003 – விண்டோஸ் சர்வர் 2003 வெளியிடப்பட்டு, அதிக அளவில் பயன்படுத்தப்படும் சர்வர் இயக்க தொகுப்பு என்ற புகழைப் பெற்றது. விண்டோஸ் சர்வர் 2000 தொகுப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக விற்பனையானது.
2003 – எக்சேஞ்ச் சர்வர் 2003 வெளியானது. நிறைய வசதிகள் மேம்படுத்தப்பட்டன. நிறுவனங்கள் சிஸ்டங்களுக்கிடையே மாறுவதற்கான எளிய வழிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரச்னைகள் ஏற்படுகையில் அவற்றிலிருந்து மீட்சி பெற பல வழிகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டிருந்தது.
2003 – மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் தொகுப்பிற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் கம்யூனிகேஷன் (Microsoft Office Live Communication) வெளியானது.
2003 – விண்டோஸ் ஷேர்பாய்ண்ட் 2.0 என்ற பெயரில் ஷேர் பாய்ண்ட் இலவச பதிப்பு தரப்பட்டது.
2003 – மைக்ரோசாப்ட் பிசினஸ் சொல்யூசன்ஸ் Microsoft Dynamics என்ற பெயரில் தரப்பட்டது. இதில் Dynamics AX, GP, NAV SL மற்றும் C5 கிடைத்தன.
2006 – 64 பிட் சப்போர்ட் செய்திடும் வகையில், டாட் நெட் 2.0 வெளியானது. விண்டோஸ் சர்வர் 2005 மற்றும் விசுவல் ஸ்டுடியோ புதிய பதிப்பும் இணைந்து கிடைத்தன.
2006 – டாட் நெட் 2.0 இணைந்த Biz Talk Server வெளியானது.
2006 – புதிய டாட் நெட் 3 வெளியானது. விண்டோஸ் விஸ்டா மற்றும் மைக்ரோசாப்ட் சர்வர் 2008 உடன் இது இணைந்து இயங்கியது.
2007 – ஸ்பேம் வகை கோப்புகள் மற்றும் மெசேஜ் வடிகட்டும் தொழில் நுட்ப வசதியுடன், 64 பிட் சப்போர்ட் கொண்ட எக்சேஞ்ச் சர்வர் 2007 வெளியானது.
2007 – மைக்ரோசாப்ட் ஷேர்பாய்ண்ட் சர்வர் 2007 வெளியானது.
2008 – விண்டோஸ் சர்வர் 2008 அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே முதல் 64 பிட் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.
2009 – விண்டோஸ் 7 வெளியானது. இதற்கு முந்தைய விண்டோஸ் தொகுப்பின் விற்பனை ரெகார்ட் அனைத்தையும் முறியடித்தது. ஏறத்தாழ 20 லட்சம் தொகுப்பு உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன.
2009 – ஆபீஸ் கம்யூனிகேசன்ஸ் சர்வர் 2007 ஆர் 2, பல முக்கிய மேம்பாடுகளுடன் வெளியானது.
2010 – டாட் நெட் 4.0 வெளியானது. மல்ட்டி கோர் ப்ராசசரின் செயல்வேகத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இதன் வடிவமைப்பு இருந்தது.
2010 – ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் சர்வர், மைக்ரோசாப்ட் லிங்க் சர்வர் (Microsoft Lync Server) என்ற பெயரில் தரப்பட்டது.
2010 – ப்ராஜக்ட் போர்ட்போலியோ சர்வர் மற்றும் வெப் அப்ளிகேஷன்ஸ் இணைத்து மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் மேம்படுத்தப்பட்டு Microsoft Project 2010 என வெளியானது.
2010 – மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் சர்வர் 2010 வெளியிடப்பட்டது. இதில் மல்ட்டி பிரவுசர் சப்போர்ட் தரும் வகையில் தொழில் நுட்பம் அமைந்தது.
2012 – விண்டோஸ் சர்வர் 2012 வடிவமைப்பில் மைக்ரோசாப்ட் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
2012 – டாட் நெட் 4.5 சோதனையில் இருந்தது. இது விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த விண்டோஸ் 8 இயக்கங்களை மட்டும் சப்போர்ட் செய்கிறது.
2012 – புதிய இன்டர்பேஸ், தொடு திரை வழி இயக்கம் ஆகியவற்றை மெட்ரோ டிசைன் லாங்குவேஜ் என அழைத்து, மைக்ரோசாப்ட் இதுவரை வெளியான விண்டோஸ் இயக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்கத் தொகுப்பினை விண்டோஸ் 8 என்ற பெயரில் வெளியிட்டது. விண்டோஸ் 8 ஆப்பரேடிங் சிஸ்டம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சரித்திரத்தில் முற்றிலுமான ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தது.
2012 – சர்பேஸ் ஆர்.டி. என்ற பெயரில், மைக்ரோசாப்ட் டேப்ளட் பிசி சந்தையில் தன் முதல் தடத்தைப் பதித்தது. ஏ.ஆர்.எம் ப்ராசசர்களில் விண்டோஸ் ஆர்.டி. இயங்கியது.
2013 – இன்டெல் கோர் ஐ 5 ப்ராசசரில் இயங்கும் சர்பேஸ் வெளியானது. தொடர்ந்து விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களுடன் விண்டோஸ் 8.1 வெளியானது.

பென்டிரைவ்

 
பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொ...றுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.

4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.

மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்…!

மொபைலில் நீங்கள் அறியாத சில...!

நாம் பயன்படுதிதும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.

இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக...்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.

ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.

உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும்.

திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.

எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.

சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

டெல்லி: உலக அளவில் செல்போன் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் செல்போன் பயன்படுத்துவதில் தமிழக வாடிக்கையாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இம்மாநிலத்தில் மட்டும் 12.16 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அறிக்கையை கொஞ்சம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

இந்தியா நம்பர் 2
செல்போன் பயன்படுத்துவதில், சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்துடன் சுமார் 86.166 கோடி செல்போன் இணைப்புகள் இருந்ததாகவும், இது ஜனவரி மாதம் வரை சுமார் 86.26 கோடியாக இருந்தது என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஜனவரியை விட பிப்ரவரி மாதம் சுமார் 0.11 சதவீதம் செல்போன் இணைப்புகள் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழகம் நம்பர் 2
செல்போன் பயன்படுத்துபவர்களில் 7 கோடியே 18 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. உ.பி, தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், ஆந்திரம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் செல்போன் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகம்.

5 மாநிலங்கள்
இந்த 5 மாநிலங்களில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையானது 36 கோடியாக உள்ளது என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையில் 45 சதவீதம் ஆகும்.

500 கோடி செல்போன் இணைப்பு
உலகில் 500 கோடி பேருக்கு செல்போன் இணைப்பு உள்ளது (உலக மக்கள் தொகை 750 கோடி). இதன்மூலம் நாம் குறைந்தபட்சம் புரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

ஆச்சரியப்படும் உண்மைகள்

ஆச்சரியப்படும் உண்மைகள்
***************************
இன்று இணையதள உலகில் 1 பில்லியன் பயனர்களுடன் கூகுளுக்கு அடுத்த இடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவது எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான்.
ஒரு நாளைக்கு கூகுள் கூட போகாமல் இருந்திடுவோம் ஆனால் பேஸ்புக் போகாமல் மட்டும் நம்மால் இருந்துவிட முடியாது.

அந்த அளவுக்கு பேஸ்புக் நம்மை அடிமைப்படுத்தி நமது முக்கிய தகவல்களை கொண்டுள்ளது எனலாம், அந்த பேஸ்புக் குறித்தும் நீங்கள் வியக்கும் வகையில் நிறைய தகவல்கள் உள்ளன.
இந்த தகவல்களை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
* இந்த உலகில் உள்ள 10ல் இருவருக்கு பேஸ்புக் அக்கவுன்ட் இருக்கிறது.
* இணையம் பயன்படுத்துவோரில் 80 சதவிகித மக்களுக்கு பேஸ்புக் அக்கவுன்ட் உள்ளது.
* ஒரு நிமிடத்தில் இதில் 10 லட்சம் லிங்குகள் ஷேர் செய்யப்படுகின்றன.
* ஒரு நிமிடத்தில் 3 மில்லியன் ஸ்டேட்டஸ் ஆப்டேப் இதில் பதியப்படுகின்றன.
* ஒரு நிமிடத்தில் 8 லட்சம் பேஜ் இன்வைட்ஸ் அனுப்பப்படுகின்றன.
* ஒரு நிமிடத்தில் 30 இலட்சம் போட்டோக்கள் TAG செய்யப்படுகின்றன.
* ஒரு நிமிடத்தில் 30 இலட்சம் பிரெண்ட் ரெக்வஸ்ட்கள் அனுப்பப்படுகின்றது.
* 9 கோடி போட்டோக்கள் கிறிஸ்மஸ் விடுமுறையில் மட்டும் பதியப்படுகின்றன.
* 80 சதவிகித இந்திய இளைஞர்கள் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.
* மேலும் 30 சதவிகிதம் பேர் பேஸ்புக்கில் இருப்பவர்களில் 35 வயதிற்கு மேல் இருப்பவர்கள்.
* 70 சதவிகித பேஸ்புக் யூஸர்ஸ் தினமும் லாக் இன் செய்கிறார்கள்.
* இதில் உள்ள மொத்த யூஸர்ஸின் சதவிகிதப்படி ஒவ்வொரு யூஸர்ஸூம் 220 பிரெண்ட்ஸ் வைத்துள்ளனர்.
* ஒரு மாதத்தில் சுமார் 900 பில்லியன் நிமிடங்கள் இதில் உள்ள மக்களால் பேஸ்புக் பயன்படுத்தப்படுகிறது.
* 50 பில்லியன் அளவுக்கு இதில் தினந்தோறும் போட்டக்கள் மற்றும் ஸ்டேட்டஸ் போடப்படுகின்றது.
* ஒரு யூஸர் ஒரு மாதத்தில் 90 ஸ்டேட்டஸ் அல்லது போட்டோக்களை ஷேர் செய்கிறார்.
* இதுவரை அதில் 70 வகையான மொழிகள் பேஸ்புக்கில் உள்ளது.
* ஒட்டுமொத்த பேஸ்புக் பயன்பாட்டில் 22 சதவிகிதம் அமெரிக்கர்கள் தான்.
* தினந்தோறும் 5 இலட்சம் யூஸர்கள் இதிலிருக்கும் TRANSLATION ஆப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர்.
* தினந்தோறும் இதில் 3 கோடி புதிய அப்ளிகேஷன்கள் ஏற்றப்படுகின்றது.
* இதை தினசரி மொபைல் மூலம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 250 மில்லியன் ஆகும்.
* ஒவ்வொரு மாதமும், 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளி வலைத்தளங்களில் பேஸ்புக்கை லிங்க் செய்கின்றனர்.
* social plugins ஏப்ரல் 2010 இல் தொடங்கப்பட்டது முதல் 10,000 புதிய வலைத்தளங்களில் சராசரியாக ஒவ்வொரு நாளும் பேஸ்புக் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
* மேலும் 2.5 மில்லியன் வலைத்தளங்கள் காம்ஸ்கோர் இன் அமெரிக்க டாப் 100 வலைத்தளங்களில் மற்றும் காம்ஸ்கோர் உலகளாவிய முதல் 100 வலைத்தளங்களில் பாதிக்கும் மேற்பட்டது பேஸ்புக்கிற்கு உட்பட்டது.
* இதுவரை உலகில் 200 மொபைல் ஆப்ரேட்டர்ஸ் நிறுவனங்கள் பேஸ்புக்குடன் கூட்டு வைத்துள்ளது.
* அல் பசினோவின் முகம் தான் அசல் பேஸ்புக் முகப்பாக இருந்தது.
* பேஸ்புக்கில உள்ள POKE என்ற வார்த்தைக்கு இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
* உலகிலேயே அதிகம் பேஸ்புக் பயன்படுத்துவோர் அவுஸ்திரேலிய மக்கள் தான்.
* ஒரு பேஸ்புக் ஊழியர் வேலை விட்டு வெளியே வந்தால் அவருக்கு eBay 2 இலட்சம் ரூபாய் மாத சம்பளத்தில் வேலை தர தயாராக இருக்கின்றது.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.

தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.


1. டேப்ளட் பிசியின் அளவு:

டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதே நேரத்தில், அதன் திரை என்ன அகலத்தில் இருக்க வேண்டும் என்பதில், பல வகையான அபிப்ராயங்கள் உள்ளன. ஐ–பேட் அதன் திரை 10 அங்குலம் (சரியாகச் சொன்னால் 9.56) என வரையறை செய்தது. அதன் எடை 750 கிராம் முதல் 900 கிராம் வரை என்ற ரீதியில் இருந்தது. சிலர் 12 அங்குல திரையை எதிர்பார்த்தனர். ஆனால், பொதுவாக ஐ–பேட் சற்று கூடுதல் தடிமனுடன் இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

தற்போது மார்க்கட்டில் வந்துள்ள டேப்ளட் பிசிக்கள், ஐ–பாட் பாணியைப் பின்பற்றாமல், மக்கள் விருப்பம் எனத் தாங்கள் கணித்தபடி, அவற்றைத் தந்துள்ளனர். சாம்சங் காலக்ஸி டேப் முதல் வெரிஸான் வரை 7 அங்குல திரை கொண்டுள்ளன. எடை 600 கிராமிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே நாள் முழுவதும் தூக்கிக் கொண்டு செயல்படுபவருக்கு, இது உகந்ததாகவே உள்ளது. அஸூஸ் நிறுவனம் 8 அல்லது 12 அங்குல அகலத்திரையுடன் டேப்ளட் பிசி தர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஒருவருக்கு சிறியதாக இருப்பது, இன்னொருவருக்கு பெரியதாக இருக்கலாம். அளவு என்பது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்ததே.

2. ஸ்டோரேஜ் அளவு:

ஐ–பாட் 16, 32 மற்றும் 64 ஜிபி உள் நினைவகத் துடன் வந்தது. இதில் கூடுதல் நினைவகத்தை ஏற்படுத்த முடியாது. கூடுதலாக நினைவகம் வேண்டும் எனில், புதியதாகத்தான் வாங்க வேண்டும். விரிவு படுத்த வேண்டும் எனில், இவற்றில் வெளியிலிருந்து இணைத்துப் பயன்படுத்தக் கூடிய நினைவகத்தைத் தான் நாட வேண்டும். அப்படி யானால், அதற்கான எஸ்.டி. அல்லது மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்ட டேப்ளட் பிசி வேண்டும்.


அதிர்ஷ்டவசமாக, ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் 7 இயக்கம் கொண்ட டேப்ளட் பிசிக்களில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி 16 மற்றும் 32 ஜிபி நினைவகத்துடனும், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்டுடனும் கிடைக்கிறது. பிமோடோ (bModo) என்னும் விண்டோஸ் டேப்ளட் பிசி, சற்று எடை கூடுதலாக இருந்தாலும், இரண்டு யு.எஸ்.பி. போர்ட் கொண்டு இருப்பதால், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ்களை இணைக்க வழி தருகிறது.
விண்டோஸ் 7 அடிப்படையில் இயங்கும் சி.டி.எல். (CTL) டேப்ளட் 250 ஜிபி ஹார்ட் ட்ரைவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

3.பேட்டரி திறன்:

டேப்ளட் பிசிக்களில் அடுத்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் அதில் தரப்பட்டிருக்கும் பேட்டரி களாகும். ஐ–பேட் இந்த வகையில் 10 முதல் 12 மணி நேரம் வரை தொடர்ந்து மின் சக்தி தருவதாக அமைக்கப்பட்டு, பெயர் பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸியில், 7 மணி நேரம் ஹை டெபனிஷன் வீடியோ பார்க்கலாம் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. சாதாரண பணிகள் எனில், 10 மணி நேரம் பயன்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், விண்டோஸ் 7 இயக்கம் கொண்டுள்ள டேப்ளட் பிசிக்கள், இந்த விஷயத்தில் ஏமாற்றம் தருகின்றன. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள டேப்ளட் பிசிக்கள் நிறைவைத் தருகின்றன.

4. 3ஜி அல்லது வை–பி மட்டுமா?

சில டேப்ளட் பிசிக்கள் 3ஜி அல்லது வை–பி நெட்வொர்க் இணைப்பு என ஏதேனும் ஒன்றையே தருகின்றன. இந்தியாவில் அறிமுகமாகும்போது, இதில் ஒரு தெளிவு ஏற்பட்டு, இரண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

5. சிஸ்டம்:

ஆண்ட்ராய்ட் போல ஓப்பன் சிஸ்டம் அல்லது விண்டோஸ் 7 போல குளோஸ்டு சிஸ்டம் எனத் தற்போது சாய்ஸ் உள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் எனில், அது கொண்டுள்ள டேப்ளட் பிசியில் சில வரையறைகள் உள்ளன. விண்டோஸ் சிஸ்டம் கொண்டுள்ள டேப்ளட் பிசியில், இந்த வரையறைகள் இல்லை. எனவே, தேவைகளின் அடிப்படையில்தான் இவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும்.

6.உள்ளீடு வழிகள்:

ஐ–பேட் சாதனம் கொண்டுள்ள, ஆன்ஸ்கிரீன் கீ போர்ட், பெரிய அளவில் டாகுமெண்ட்களை உருவாக்க ஒரு தடையாகவே கருதப்படுகிறது. எனவே வயர்டு கீ போர்ட் அல்லது இணைப்பின்றி செயல்படும் புளுடூத் கீ போர்டு பயன்படுத்தியாக வேண்டும். ஆனால் ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்க டேப்ளட் பிசிக்களில், யு.எஸ்.பி. போர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், அதன் இணைப்பில் கீ போர்டுகளைக் கொண்டு, விரைவாகச் செயல்படலாம்.

7. விலை:

மிக முக்கியமான ஒரு விஷயம் விலையே. இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் விலையின் அடிப்படையிலேயே எந்த சாதனத்தினையும் வாங்கிப் பயன்படுத்த முன்வருவார்கள் என்பது ஏற்கனவே மொபைல் போன் மற்றும் சில சாதனங்களில் நிரூபணம் ஆகி உள்ளது. எனவே, இந்தியாவில் டேப்ளட் பிசிக்கள் விற்பனைக்கு நேரடியாக அறிமுகம் ஆகும்போது இந்த அம்சமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம்.

8. சிரிங்க, கேமரா முன்னால இருக்கு:

ஐ–பேட் சாதனம் குறித்துக் கருத்து தெரிவிக்கையில், அதில் கேமரா இல்லாதது பலமாகப் பேசப்பட்டது. பொதுவான போட்டோ எடுக்கும் வகையிலான கேமரா அந்த சாதனத்திற்குள் இல்லை. எனவே போட்டோ எடுக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்சிங் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனில், ஆப்பிள் ஐ–பேட் உகந்தது அல்ல என்ற கருத்தினை அனைவரும் மேற்கொண்டுள்ளனர். மற்ற பெரும் பாலான நிறுவனங்களின் படைப்புகள் கேமராவினைக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

9. கூடுதல் அப்ளிகேஷன் புரோகிராம்கள்:

ஸ்மார்ட் போன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில், அதில் எத்தனை அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிந்து இயக்கலாம் எனவே அனைவரும் எதிர்பார்க் கின்றனர். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர், ஐ–பேட் மற்றும் ஐ–போனுக்கென ஆயிரக் கணக்கில் அப்ளிகேஷன் புரோகிராம்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஐ–பேட் சாதனத்திற்கான புரோகிராம்கள் என எடுத்துக் கொண்டால், அவை சற்றுக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் டேப்ளட் பிசிக்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் பல வர இருப்பதாக தகவல்கள் இதனாலேயே வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே, எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்களை வாங்குவது என்றும் முடிவு செய்திடலாம்.

10.ஒத்திசைந்த செயல்பாடு:

ஒரு டேப்ளட் பிசி தனியே மட்டும் இயங்காது. உங்களுக்கு 3ஜி டேப்ளட் பிசி வேண்டும் என்றால், அது உங்களுக்கு அந்த சேவையைத் தரும் நிறுவனத்தின் செயல்பாட்டுடன் இணைந்து செல்ல வேண்டும். கேலக்ஸி டேப் போன்ற டேப்ளட் பிசிக்கள், ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ வகை இணைப்புகளுடன் இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவையாக உள்ளன. எனவே டேப்ளட் பிசியைத் தேர்ந்தெடுக்கையில் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில், நமக்கு எந்த மாதிரி டேப்ளட் பிசி வேண்டும் என ஒரு பரவலான முடிவினை எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்தியச் சந்தையில், அதிக எண்ணிக்கையில் நிறுவனங்கள், டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வருகையில், முடிவினை எடுக்க இது உதவியாக இருக்கும்.

Windows Experience Index (Windows Rating) என்பது என்ன?

விண்டோஸ் கணினியின் performanceஐ அளவிட Windows Experience Index (Windows Rating) என்கிறார்கள். இந்த Rating வன்பொருள்,மென்பொருள் வேலை செய்யும் திறனை CPU, RAM, GPU, Hard Disk உடன் சேர்த்து கணக்கிட்டு தரப்படுகிறது. இது ஒரு கணினியின் செயல்பாட்டை பொறுத்து மதிப்பிடப்படுகிறது. இது பற்றிய விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

இதை நீங்கள் கணினியில் Start -> Control Panel –> Performance Information and Tools அல்லது system -> Windows Experience Index இங்கே சென்று பார்க்க முடியும்.
புதிய மென்பொருள்/வன்பொருள் கணினியில் இணைக்கும் போது புதிதாக reset செய்தால், rating சரி செய்யப்பட்டு புதிய அளவு காட்டப்படும். அங்கே basicScore, subscore என இரண்டு அளவுகள் காட்டப்படும். subscore இன் குறைந்த அளவு basicScore இல் காட்டப்படும். கணினி வாங்கும்போது முக்கியமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கணினிகளை வாங்கும் போது இந்த rating ஐக் கவனித்து வாங்கலாம். ஆனாலும் அவை நிச்சயம் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம் படத்தைப் பாருங்கள். சாதாரண பழைய கணினியில் 1.0 என்ற basicScore ஐ 7.9 ஆக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
நமது அரசின் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் நிதி நிலை, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என பல நல்ல தகவல்களை புள்ளி விபரங்களுடன் தெரிவிப்பார். சில தினங்களின் பின்னர் அதிகாரிகளும் பொருளாதார நிபுணர்களும், நாம் தலையில் கையை வைக்கும் அளவு மோசமான தகவல்களைத் தருவார்கள்.அது போல் நாம் எதையும் எப்படியும் மாற்றி அமைக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாம் Man Made. God Made அல்ல.
இந்த Rating முறை 1 இல் இருந்து 7.9 வரை உள்ளது. 64 பிட் இல் 4 GB Ram ற்கு கீழிருந்தால், Basicscore 5.9 ஆக அதி கூடிய அளவாகக் காட்டப்படும். ஓரளவு பயன்படுத்தப்பட்ட சாதாரண கணினியில் 2.0 – ஆக இருந்தால் பொதுவான அனைத்து வேலைகளுக்கும் ஏற்றதாக இருக்கும். 3.0 என்பது Windows 7 இல் Nero வுடன் சாதாரண வேலைகளுக்கு ஏற்றதாக இருக்கும். 5.0 என்பது Windows 7 புதிய முறைகளைப் பயன்படுத்தவும், multi-taskingக்கு ஏற்றதாகவும், 7.0 என்பது கிராபிக், விளையாட்டு போன்ற உயர்ந்த வேலைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும். இதற்குப் பொருள், பிரச்சனைகள் இன்றி நன்றாக வேலை செய்யும் என்பதே தவிர, அவற்றிற்கு குறைந்த அளவு Rating உள்ளவை வேலை செய்யாது என்பது பொருள் அல்ல. subscore களின் அளவைப் பார்த்து, குறைவாக உள்ளவற்றை upgrade செய்வதன் மூலம் basicScore இன் அளவை உயர்த்தலாம்.
இந்தப் படத்தில் Processor 5.3 எனக் காட்டப்படுவதால், Basicscore 5.3 ஆக இருக்கிறது. CPU Driverஐ update செய்யலாம் அல்லது முடிந்தால் upgrade செய்யலாம். அப்படி செய்வதால் வேகம், performance ஐ அதிகரிக்கலாம். அது போல் RAM upgrade செய்யலாம் அல்லது RAM ஐக் கழற்றி தொடர்புகளை சுத்தம் செய்து மீண்டும் இணைத்துக் கொள்ளலாம். அது போல் கிராபிக் கார்டையும் upgrade அல்லது driver update செய்து கொள்ளலாம்.
மேலே உள்ள படத்தில் HardDisk என்ற வன்தட்டு 5.9 என குறைந்த அளவில் காட்டப்பட்டு, subscore உம் அதே குறைந்த அளவைக் காட்டுகிறது. மற்றவை நன்றாக இருக்கிறது. விரும்பினால் புதிய வன்தட்டு ஒன்றை மாற்றலாம். அப்படி மாற்றும்படி சொல்வதைவிட ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது சிறந்ததாகும்..
வன்தட்டு என்பது case, drive motor, platters, drive heads, logic board இவற்றால் ஆனது. அடிக்கடி format செய்வது, அடிக்கடி OS களை மாற்றுவது, இவற்றால் Track, Sector track, Sector, Cluster களில் ஏற்படும் பிழைகள், defragmentation செய்யாமல் விடுவது, chkdsk செய்யாது விடுவது போன்றவற்றாலும், கணினி, மடிக்கணினி உள்ளே தூசிகள் தங்கி விடுவதாலும் இந்தப் பிழைகள் ஏற்படுகிறது. அதிக தூசிகள் கணினிக்குள் தங்கி விடுவதால், அதிக வெப்பம் ஏற்படுவதும், தூசி அடைத்துக் கொள்வதால் cooling fan,CPU-Heatsink, GPU fan, Hard Disk, CD/DVD Drive வேலை செய்யாமல் விடவோ அல்லது வேலை செய்யும் தரத்தைக் குறைக்கவோ செய்யும். அத்துடன் உள்ளே வெப்பம் அதிகரித்து மிக குறைந்த மின்சாரத்தில் இயங்கும் பகுதிகள் பழுதடைகின்றன.
இதைவிட வன்தட்டு, CD/DVD/USB/SD Card இவை ஒவ்வொன்றும் வேவ்வேறான முறையில் read and write செய்யப்படுவதுடன் வேகமும் வேறுபடுகிறது. உதாரணமாக IDE,SATA வை விட SSD hard drive முற்றிலும் வேறுபட்ட முறையில் இயங்குகிறது. Rating இல் subscore வன்தட்டின் வேகத்தையும் megabytes per second கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இவை எல்லாம் தான் குறைந்த rating ற்கு காரணம். அதனால் வன்தட்டை மாற்றுவதை விட மேலே சொன்னவற்றை கவனிப்பதாலும் சரி செய்யலாம்.
வன்தட்டின் வெப்பம் 25 – 50 டிகிரி செல்சியுஸ்ற்குள் இருக்க வேண்டும். 50ற்கு மேலானால் உட்பகுதிகளை பழுதடையச் செய்யும். (CPU/GPU 40 -65 டிகிரி செல்சியுஸ் ற்குள் இருப்பது சிறந்தது.) அதிக வெப்பநிலை ஏற்படுமானால், மேலதிகமாக ஒரு cooling Fan ஐ இணைத்துக் கொள்ளலாம்.
இந்த Ratingஐ வைத்து ஒரு கணினியின் செயல்பாட்டை அறிந்து கொள்ளலாம்.